இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படுகொலைக்கு காரணமானவர்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தி உள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா கடந்த நாட்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளிட்டு வருகின்ற நிலையிலேயே, வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பிலும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இராணுவத் தளபதியாக இருக்கும் போது பெரும் தொகையான மக்கள் சரணடைந்தனர். மக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் 12,000 பேரும் சரணடைந்தனர்.
ஆனால் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக இரு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இசைப்பிரியா தொடர்பிலும் முறைப்பாடுகள் இருந்தன. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் சிலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரியவந்தது.
அதில் இசைப்பிரியாவை அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு இருந்தமை நான் அறிவேன். அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த “எந்த விதாரண” தொடர்பில் பேசப்பட்டது. மேலும் வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த ஜகத் ஜயசூரியவால் பலர் கடத்தப்பட்டதாகவும் பல முரணான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இராணுவ சிப்பாய்கள் தெரிவித்திருந்தனர்.
அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்திலும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது எனவும் இசைப்பிரியாவின் சம்பவத்தின் போது நான் இராணுவத் தளபதியாக இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார் பொன்சேகா. மேலும் மஹிந்த ராஜபக்ச தான் ஜகத் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக நிமியமித்தார். நான் வேண்டாம் என கூறினேன். அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் இருப்பதால் அது வேண்டாம் என்றேன்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி சிரித்துக் கொண்டே முரணான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நியமனம் கடிதம் வழங்கும் போது கூறினார். இதற்கு அனைத்துக்கும் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.