கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2,700 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் – சாணக்கியன் எம்.பி

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2700 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற மன்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 19 இடங்களும், போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 34 இடங்களும் அடையளப்படுத்தியிருக்கின்றார்கள்.

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை(05.01.2026) மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் கண்ணபுரம் கிராம மக்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொல்பொருள் திணைக்களம் போரதீவுப் பற்றுப்பிரதேசத்திற்கு அண்மையில் வந்த நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த பதாகைகளை நிறுவுவதற்கு அம்மக்கள் விடவில்லை. அவ்வாறு மக்கள் விட்டிருந்தால் அது தொல்பொருள் திணைகளத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இடமாக மாறியிருக்கும் அதன்போது எமது மக்கள் செயற்பட்ட மக்கள் 55 பேருக்கு வழக்கு போட்டிருக்கின்றார்கள். அது எமது தமிழினத்திற்காக இந்த கண்ணபுரம் மக்கள் எடுத்துக்கொண்ட மாபெரும் பணியாகும்.

கடந்த காலத்திலேயே ஆயுதங்கள் இருந்தன ஆயுதத்தை வைத்து போராடிய ஒரு இனம் நாங்கள். தற்போது நிலையில் ஆயுதம் இல்லை நாங்கள் ஜனநாயகரீதியில் எங்களுடைய ஜனநாயக உரிமைப் போராட்டத்தை செய்து வருகின்றோம். போராட்டத்தின் வடிவம் மாறி இருந்தாலும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயற்படுகின்றோம்.

மக்கள் அன்றைய தினம் மழையையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகப் போராட்டம் செய்த காரணத்தினால்தான் இந்த பிரதேசத்திலே தொல்பொருள் துணைக்களம் எனு அடையாளப்படுத்தப்பட்ட பதாகைகளைப் போடப்படவில்லை. அவ்வாறு அவர்கள் பதாகைகளை இட்டு தொல்பொருள் இடம் என அடையாளப்படுத்தியிருந்தால் அதன் பின் அப்பகுதிக்குள் எமது மக்கள் சென்று ஒரு சிறிய வேலையைகூட செய்ய முடியாமல் போகும்.

அங்கு இருக்கின்ற ஆலயத்தில் ஒரு சிற்பத்தை மாற்ற வேண்டும் என்றால்கூட தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியை பெறாமல் அதனை மாற்ற முடியாது. மாறாக அவர்கள் அனுமதியை தரவும் மாட்டார்கள் அவ்வாறு அனுமதி இல்லாமல் அப்பகுதிக்குள் உள்நுழைந்து அதனை தொட்டால்கூட வழக்கு போடாமல் நேரடியாகவே சிறைச்சாலைக்கு அனுப்புவார்கள் மாறாக பிணைகூட வழங்க மாட்டார்கள்.

இலங்கையில் இரண்டு பாரிய சட்டங்களுக்கு பிணையில்லை ஒன்று பொதுச்சொத்துச் சட்டம்  மற்றயது தொல்பொருள் சட்டம்.

தற்போதைய நிலையில் கொலை செய்தவர்கள் கொள்ளையடித்தவர்கள், கற்பழித்தவர்கள், கஞ்சா கடத்தியவர்கள், போதைவஸ்து கடத்தியவர்கள், இவ்வாறு இருக்கிறார்கள் எங்களுடைய மாவட்டத்திலும் அவ்வாறான பணிகளை செய்தவர்கள் தற்போதும் சிறைச்சாலைகள் இருக்கிறார்கள். ஒரு சிலர் இவ்வாறு கொடூரமான பிழைகளை செய்தவர்களைகூட பொலிஸ் குழுக்களை அமைத்து தீவிரமாக தேடவில்லை.

ஆனால் தொல்பொருள் தொடர்பில் செயற்பட்ட எமது தவிசாளர்களை பொரிசார் தேடினார்கள் இந்நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினரின் செயற்பாடுகளுக்கு எதிராக எமது மக்களை எமது தலைவர்கள் சரியான முறையில் வழிநடத்தி எதிர்ப்பு வெளியிட்டு அவர்களை அனுப்பி இருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2700 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற மன்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 19 இடங்களும், போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 34 இடங்களும் அடையளப்படுத்தியிருக்கின்றார்கள்.

பிரதேச சபையில் அனுமதி பெற்ற பின்னர் பதாகைகளை நடுமாறு நீதிமன்றம் எனக்கு ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இனிமேல் தொல்பொருள் திணைக்களம் இப்பகுதியில் பதாகைகளை நடுவதற்கு வருவதாக இருந்தால் பிரதேச சபையில் அனுமதி பெற்ற பின்ரேதான் வரமுடியும்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி வரைக்கும் இந்த செய்தி செல்லக்கூடிய வகையில் மாபெரும் ஜனநாயக போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இவ்வாறுதான் முல்லைத்தீவிலுள்ள குறுந்தூர் மலை அமைந்துள்ள பகுதியில் விகாரை இருப்பதாக தெரிவித்து அப்பகுதியைச் சுற்றி இருக்கின்ற ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார்கள். அதில் வருபவர்கள் யாராவது மகாவம்சம் எனக்கூறி சிங்களவர்கள் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டு பல கதைகளை கூறுவார்கள்.

இந்த நிலையில்தான் எனது மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடப் புத்தகங்களிலும் தமிழர் வரலாறுகள் இல்லை. மாறாக சிங்கள மன்னர்களின் வரலாறுகள்தான் அமைந்துள்ளன. தொல்பொருள் திணைக்களத்திலட வேலை செய்பவர்களும் இவ்வாறான வரலாறுகளை படித்து விட்டுதான் வருகின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியை  ஐயோ பாவம் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கின்றார் அவர் நல்ல மனிதர் என சொன்னால் இங்கு வாழ்கின்றவர்கள் ஜனாதிபதி இல்லையே! இது ஜனாதிபதியின் ஊரும் இல்லையே! அவருக்கு என்ன அக்கறை உள்ளது. ஜனாதிபதியிடம் இதனை கூறினால் ஐயோ என்ன செய்வது அது சட்ட சிக்கல்கள்தானே என அவர் சமாளித்து விடுவார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒதுக்கீடு இல்லை. இது என்ன அரசாங்கம் என்றால் எனக்கு விளங்குவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுதான் இல்லை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்த சம்பளமே இல்லை. அதனையும் அரசாங்கம் பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். என அவர் இதன்பேது தெரிவித்தார்.