344 Views
சிங்கள நடிகர் ஒருவர் உண்ணாவிரதம்
ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கும், படுகொலை சம்பவத்திற்கும் நீதி கோரி சிங்கள நடிகர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரம்புக்கனை படுகொலைக்கு நீதி கோரி காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் சிங்கள நடிகர் குணசேகர உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு காலி முகத்திடல் போராட்ட களத்தில் நேற்று 2வது நாளாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, ரம்புக்கனை படுகொலை சம்பவத்திற்கு நீதி கோரி சடலங்கள் போன்று செய்யப்பட்ட மாதிரி உடலங்களுடன் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.