விவசாய நடவடிக்கைகளில் கைதிகளை ஈடுபடுத்த திட்டம்

இலங்கையின் கைதிகளுக்கு சர்வதேச ஆதரவுடன் நவீன விவசாய நடைமுறைகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) ஆகியவற்றின் உதவியுடன் கைதிகளின் நவீன நடைமுறைகளில் பயிர்ச்செய்கை திறன்களை மேம்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“உக்ரைன் ரஷ்யா போர் 2023 இலும் தொடர்ந்தால், உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம். அனைத்து செல்வந்த நாடுகளும் கையிருப்பில் இருக்கும் மற்றும் அதிக உணவை வாங்கும் சக்தியைக் கொண்டிருக்கும், மேலும் நாம் அவர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும், இது பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். உணவுப் பற்றாக்குறை மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராட, உணவுப் பாதுகாப்பு மற்ற என ஜனைதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹர சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன இளைஞர் சீர்திருத்த நிலையத்தின் காணிகள் நிலையான விவசாயக் கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், சமூகத்தில் வெற்றிகரமாக மீண்டும் ஒன்றிணைவதற்கான திறன்களை மேம்படுத்துவதற்கும் ஐ.நா.வுடன் ஒரு வேலைத்திட்டம் நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“சமூகத்தில் வெற்றிகரமான மீள் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, கைதிகள் தங்கள் திறமைகளை அர்த்தமுள்ள வகையில் வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சீர்திருத்த வசதிகளிலுள்ள நவீன விவசாயக் கட்டமைப்புகள் கைதிகளின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவும்” என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.