இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

மனித உரிமைகள் குழுவின் 137வது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 24 வரை நடைபெறுகின்றது.

இதில் இலங்கை, பெரு, பனாமா, எகிப்து, சாம்பியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

173 உறுப்பினர்கள் குழுவில் அடங்கும் இந்த 6 நாடுகளினதும் மதிப்பாய்வை, 18 சர்வதேச சுயாதீன நிபுணர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கமைய, மனித உரிமை மீறல்கள், பாலின அடிப்படையிலான வன்முறைகள், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் இலங்கையில் அவசரகால நிலைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீதி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் அமர்வில் பொது உரையாடல்கள் மூலம் விவாதிக்கப்படவுள்ளன.