உலக நாடுகளில் பரவும் புதியவகை நோய்

மங்கிபொக்ஸ் (குரங்கு அம்மை) எனப்படும் புதிய வைரஸ் நோய் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் பரவிய இந்த நோய், தற்போது ஸ்பெயினிலும், அமெரிக்காவிலும் பரவிவருகின்றது. பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையுள்ள ஆண்களில் தான் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இதுவரை 23 நபர்களில் இந்த நோயின் தாக்கம் அறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் நோய் காற்றின் மூலம் சுவாத்தொகுதியினூடாக பரவும் போதும், தற்போது கண்டறியப்பட்டவர்களிடம் நேரிடையான தொடர்புகள் மூலம் பரவியது தெரியவந்துள்ளது.

1980 களில் பரவிய சின்னம்மையை போன்ற இந்த நோயானது, காய்ச்சல், தலையிடி, தசைகளில் வலி, தோலில் கொப்பளங்கள் போன்ற அறிகுறிகளை தோற்றுவிக்கும் தன்மையுடையது. கோவிட் -19 நோயைப் போல இந்த நோய்க்கான மாற்று மருந்துகள் இல்லை. ஆனால் நோய் வர முன்னர் தடுக்கும் தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம்.

Tamil News