சீன கம்யூனிஸ கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்துள்ளது.
சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ தலைமையிலான இவ்வுயர்மட்டப் பிரதிநிதிக்ள குழுவினர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ கட்சியின் 20 ஆவது தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாண்டில் அக்கட்சிப் பிரதிநிதிகள் வெளிநாடொன்றுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது சீன கம்யூனிஸ கட்சிப் பிரதிநிதிகள் இலங்கையின் உயர்மட்ட அரசதலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.