சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரையில் மீண்டும் ஒரு புத்தர் சிலை!

எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி திஸ்ஸ விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அதற்கான பாதுகாப்பு கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

“2026 ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அன்று காலை 10.00 மணிக்கு ஸ்தாச சிதி ராஜ விஹாரையில் இருந்து கொண்டு வரப்பட்டும் புத்தர் சிலை திஸ்ஸ ராஜ விஹாரையில் நிறுவப்படும்” என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பக்தர்கள் மற்றும் பௌத்த துறவிகளின் பங்கேற்புடன் ஊர்வலம் நடத்தப்படுவதோடு, அது தொடர்பில் தையிட்டி திஸ்ஸ விஹாரையின் தலைமை தேரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் பங்கேற்பவர்கள் எந்த பயமோ சந்தேகமோ இல்லாமல் விகாரைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நடவடிக்கைகளுக்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விஹாரைக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.