வடக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு எச்சரிக்கை விடுத்த சுகாதார தொண்டர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடந்த பல வருடகாலமாக சுகாதார தொண்டர்களாக கடையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாளைய தினம் ஆளுனர் தலைமையில்  நடைபெற உள்ளது.

இந்நியமனம் வழங்குவதற்காக தெரிவுசெய்யபட்வர்களில் பெரும்பாலானவர்கள் ஒருநாள் கூட சுகாதார தொண்டராக கடமையாற்றாதவர்களுக்கும் ஜந்து வருடங்களில் ஓய்வூதியத்திற்கு செல்வபவர்களுக்கும் மற்றும் அரசியல்வாதிகளின் நேரடி
சிபரிசிலும் இந் நியமனப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நியமனம்
வழங்கப்படவுள்ளது.

இதனால் உண்மையாக நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மிக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஊழியர்களும் கணவனை இழந்த பெண்களும் இந் நியமனத்தில் இருந்து புறக்கணிக்கபட்டுள்ளனர்.

நியமனம் வழங்கும் பெயர்பட்டியலில் தகமை இல்லாதவர்களை முன்னிலைப்படுத்தியும் தகமையுள்ளவர்களை பெயர்பட்டியலின் இறுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளதோடு ஆட்சேர்ப்பு செய்வதிலும் பல முரன்பாடான நிலமை காணப்படுகின்றது என பாதிக்கப்பட்ட சுகாதாரதொண்டர்கள் தெரிவிக்கின்றனர் உதாரணமாக தரம்-9 கற்றிருப்பவர்களுக்கே இந் நியமனம் வழங்கப்படுவதற்கான அடிப்படை தகமை உள்ளது என தெரிவித்து  கா.பொ.த சாதாரண தரம் சித்தியெய்தியவர்களுக்கு இந் நியமனம் வழங்கப்படமுடியாது என பல தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர் ஆனால் அதே நேரத்தில் க.பொ.த.உயர்தரம் தேர்சிபெற்றவர்களையும் இவ் நியமனத்திற்குள் உள்வாங்கியுள்ளனர் இச்செயற்பாடானது ஆட்சேர்பு செய்வதில் உள்ள முரன்பாட்டை தெளிவாகாட்டுகின்றது.

நாளைய தினம் நியமனம் பெறவுள்ள சுகாதார தொண்டர்களின் நியமனப் பெயர் பட்டியலை மீளாய்வு செய்து குறுக்கு வழியிலும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி நியமனம் பெறவுள்ளவர்களையும் பணத்தை கொடுத்து நியமனத்திற்குள் உள்வாங்கப்பட்டவர்களையும் பெயர்பட்டியலில் இருந்து நீக்கி உண்மையாக அரப்பணிப்புடன் பணியாற்றியவர்களிற்கு இவ் நியமனத்தை வழங்குவதற்கு வடமாகாண ஆளுனர் சுரேன்ராகவன் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கபட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் எனவும் தவறும்
பட்சத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களை இலக்காக கொண்டு தவறானவர்களுக்கு இந் நியமனம் வழங்கப்படுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிர்வரும் தேர்தல்களில் உரிய பதிலை வழங்கவேண்டி வரும் என பாதிக்கபட்ட சுகாதார தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.