மாகாண சபை  ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரே நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டுவரப்படும் – சனாதிபதி வேட்பாளர்

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படும், மாகாண சபை  முறைமை முழு­மை­யாக ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரு நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டு வரும் திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன, மைத்­திரி, ரணில், மஹிந்த ஆகியோர் பய­னற்ற அர­சியல் கட்­ட­மைப்­பையே முன்­னெ­டுத்து செல்­வார்கள். ஆகவே இத்­த­ரப்­பி­னர்­களை நாட்டு மக்கள் புறக்­க­ணிக்க  வேண்டும் என ஜனா­தி­பதி  சட்­டத்­த­ரணி நாகா­னந்த கொடித்­து­வக்கு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி தேர்­தலில்  ஒன்­றி­ணைந்த அர­சியல் கட்­சி­களின் ஊடாக சுயா­தீ­னமாக  போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்­ள­மை­யி­னையும். ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­வைக்கும் கொள்­கைத்­திட்­டங்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கு­மான  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று  நிப்பொன் ஹோட்­டலில் இடம் பெற்­றது. அதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில்,

இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் முறை­கே­டாக அர­சியல் நிர்­வா­கத்­தையே கொண்­டுள்­ளது.   ஜனா­தி­பதி தேர்­த­லையும் முறை­யற்ற விதத்­திலே வெற்றி கொள்ள முனை­கின்­றார்கள்.இவ்­விரு கட்­சி­களும்  மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட வேண்டும்.

71 வருட கால பழைமை வாய்ந்த அர­சி யல் கட்­ட­மைப்பு முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். மக்­களின் வரிப்­ப­ணத்தை வீண­டிக்கும் அரச செயன்­மு­றை­களே அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. நீதிக்­கட்­ட­மைப்பு அர­சியல் தலை­யீ­டுகள் இன்றி சுயா­தீ­ன­மாக செயற்­பட்டால் மாத்­தி­ரமே நாடு அனைத்து துறை­க­ளிலும் முன்­னேற்­ற­ம­டையும்.

மக்­க­ளா­ணை­யினை மதிக்கும் கொள்­கைத்­திட்­டங்­களே எம்மால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.  நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படும், மாகாண சபை  முறைமை முழு­மை­யாக ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரு நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டு வரும் திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன.

எமது நாட்டின் உள்­ளக விவ­கா­ரங்­களில் சர்­வதேச அமைப்­புக்கள் தலை­யீடு காணப்­ப­டு­கின்­றது. இதற்கு அர­சாங்­கமும், நடை­மு­றையில் உள்ள சட்­டங்­க­ளுமே வழி­மு­றை­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளன. ஆகவே  சட்­டத்தின் வாயி­லா­கவே அனைத்தும் இடம் பெறு­வ­தால்­நீ­தித்­துறை கட்­ட­மைப்பு முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

முறை­யற்ற அர­சியல் நிர்­வாக கட்டமைப் புக்களுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற  ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் முயற்சிக்கின்றார்கள். இவர்கள் மூவரும்  அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் இம்முறை சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.