காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு புலம்பெயர் தேசங்களிலும் வலுச்சேர்க்கவேண்டும்

392
207 Views

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக பாரிய போராட்டம் ஒன்றை வடகிழக்கு மாகாணங்களை சோ்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மேற்கொள்ள உள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் இடம்பெறும் இப்போராட்டத்திற்கு அவர்கள் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ் உறவுகளினதும்
ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

இறுதி போாில் உயிருடன் படையினாிடம் ஒப்படைக்கப்பட்ட வர்களின் மீட்புக்காக சா்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோா் தினத்தில்  இம்மாதம் 30ம் திகதி இந்த கவனயீா்ப்பு இடம்பெறவுள்ளது.

இந்த வேளையில்  தாயகத்தில் நிலைத்துநின்று,பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இப்போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கும் எமது உறவுகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக புலம்பெயர் சமூகம் தாம் வாழும் நாடுகளில் தம்மாலான செயற்பாடுகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here