ஐ.நா மனித உரிமை சபை ஒரு குப்பை என்று கூறிய அமெரிக்கா எம்மை விமர்ச்சிகத் தகுதியற்றது – விமல்

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கருத்துக்களைக் கூறும் அருகதை அமெரிக்காவுக்கு இல்லை என சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (20) கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு என்பது அரசியல் தலையீடுகளைக் கொண்ட ஒரு குப்பை என ஐ.நாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி கெலே முன்னர் தெரிவித்ததுடன், அமெரிக்கா அதில் இருந்து விலகியிருந்தது. ஆனால் தற்போது அதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் சில்வா மீது அமெரிக்கா குற்றம் சுமத்துகின்றது.

சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கு அரு-கதையில்லை. சிறீலங்கா மீது தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போதும் அமெரிக்கா முன்னர் அதனை தடுத்திருந்தது. ஆனால் தற்போது எமது உள்விவகாரங்களில் அது தலையிடுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.