மைத்­தி­ரி மற்றும் சஜித் பிரே­ம­தாஸ இணையும் பல­மான மூன்­றா­வது அணி

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோரின் கூட்டில் பல­மான மூன்­றா­வது அணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் திரை­ம­றைவில் இடம்­பெற்று வரு­வ­தாக இரு­த­ரப்­பி­லு­முள்ள நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறிய முடி­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாஸ கள­மி­றக்­கப்­ப­டாத பட்­சத்­திலும், பொது­ஜன முன்­ன­ணிக்கும், சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை தோல்­வி­ய­டையும்  நிலை­யிலும்  இந்தப் புதிய கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த கூட்­ட­ணியில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் பொது­ஜன முன்­ன­ணி­யிலும் அதி­ருப்­தியில் உள்ள அனைத்து தரப்­பு­க­ளையும் ஒன்­றி­ணைத்து பரந்து பட்ட பல­மான மூன்­றா­வது அணியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

விசே­ட­மாக இவ்­வாறு உரு­வெ­டுக்கும் மூன்­றா­வது அணி­யா­னது ‘கஜ­ச­வித்த சமூக இளைஞர் முன்­னணி’ என்று தற்­போது இயங்கி வரும் அமைப்பின் பெயரில் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இப்­பெ­யரில் கள­மி­றங்­கு­வதால் யானை சின்­னத்­தினை ஆத­ரிக்கும் கிராம மட்ட மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வினைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது

இதே­வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­க­ளுடன் முரண்­பட்­டி­ருக்­கையில் எவ்­வாறு சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் இணைந்து பணி­யாற்­றுவார் என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போது, சமுக கட்­ட­மைப்பு ரீதி­யாக இரு­வரும் கொண்­டி­ருக்கும் அடை­யா­ளங்கள் கார­ண­மாக  இணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான  வாய்ப்­புக்கள்  உள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

முன்­ன­தாக கடந்த ஒக்­டோ­பரில் ஏற்­பட்ட அர­சியல் புரட்­சியின் போது சஜித் பிரே­ம­தா­ஸவை பிர­தமர் பத­வியை ஏற்­கு­மாறு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்­த­போதும் அதனை அவர் மறுத்­தி­ருந்தார். இருப்­பினும் தற்­போ­தைய நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பான பனிப்போர் உச்ச கட்­டத்­தினை அடைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந் நிலையில் எந்த சவா­லையும் முகங்­கொ­டுத்து ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு தயார் என்று சஜித் பிரே­ம­தாஸ பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்ளார். இந்த அறி­விப்­பா­னது மேற்­படி முயற்­சி­யினை பின்­ன­ணி­யாக கொண்டு முதற்­கட்­ட­மாக அவர் தரப்­பி­லி­ருந்து ஐ.தே.க தலை­மைக்கு விடுக்­கப்­பட்­டுள்ள சவா­லாக அமைந்­துள்­ள­தாக   அர­சியல் அவ­தா­னிப்­பா­ளர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

ஐ.தே.க கூட்­டணி

இதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்­ட­ணியைப் பொறுத்­த­வ­ரையில் சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்டால் அவரின் கீழ் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவால் கட­மை­யாற்ற முடி­யாது. அத்­துடன் நிறை­வேற்று அதி­கா­ரத்­தினை முழு­மை­யாக நீக்கி பிர­த­ம­ருக்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­திலும் சிக்­க­லான நிலைமை ஏற்­படும். மேலும் சஜித்­துக்கு வேட்­பாளர் பதவி வழங்­கப்­ப­டு­வ­தாயின் பிர­தமர் ரணில் முழு­மை­யாக அர­சி­ய­லி­லி­ருந்து விலக வேண்டும். எனினும் அது உட­னடிச் சாத்­தி­ய­மில்லை.

மறு­ப­டியும்  கதிர்­காமம் மாநாட்டில் நிறை­வேற்று அதி­கார முறை­மையை நீக்­கு­வ­தற்கு முன்­மொ­ழிந்த சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவை வேட்­பா­ள­ராக நிய­மித்து முன்­மொ­ழி­வுக்கு அமைய அம்­மு­றையை முழு­மை­யாக நீக்கி வெஸ்­மி­னிஸ்டர் முறை­மையை அமு­லாக்க முயன்றால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது வாய்ப்­பாக இருக்கும் . ஆகவே, ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ச்­சி­யாக அர­சி­யலில் நீடிக்கும் வரையில் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கான வாய்ப்பு இங்கு  கேள்­விக்­கு­றி­யா­கின்­றது.

அதே­போன்று பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், ஐ.தே.கவின் பங்­கா­ளி­க­ளா­க­வுள்ள தமிழ், முஸ்லிம் தரப்­பு­களும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கே ஆத­ரவை வெளி­யிட்­டுள்­ளன. இதனால் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­டா­த­வி­டத்தில் கட்சி மற்றும் கூட்­ட­ணி­யினுள் பிள­வுகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதி­க­மா­க­வுள்­ளன.

 மஹிந்த அணி

மஹிந்த அணியைப் பொறுத்­த­வ­ரையில் ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­லி­ருந்தே ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற நிலை­மையே  அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. எனினும், கோத்­தா­பய, சமல், பசில், தினேஷ், சிரந்தி என பட்­டியல் நீண்டு செல்­கின்­றது.  ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­லி­ருந்து வேட்­பாளர் நிய­மிக்­கப்­பட்டால் தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளா­க­வி­ருக்கும் சிறு­பான்மை தரப்­பு­களின் ஆத­ரவை பெறு­வது கடி­ன­மாக இருக்கும் என்ற கருத்­து­களும் அவ்­வ­ணிக்குள் வெகு­வாக வலுத்­துள்­ளன. குறிப்­பாக கோத்­தா­ப­ய­வுக்கு இடது சாரிக்­கட்­சிகள் எதிர்ப்­பினை வெளி­யிட்டு வரு­கின்­றன.

அதே­போன்று மஹிந்­தவின் குடும்­பத்­திற்­குள்ளும் மறை­முக எதிர்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. இத­னை­வி­டவும் மஹிந்த அணி­யுடன் இணைந்­துள்ள, இணை­ய­வுள்ள தரப்­புகள் அதி­கா­ரப்­ப­கிர்வு கோத்­தா­பய எதி­ரா­னவர் என்­பதால் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை உட­ன­டி­யாக முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற உறு­தி­மொ­ழியை எழுத்­து­மூ­ல­மாக பெறு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­துள்­ளன.

இட­து­சா­ரி­களின் கோரிக்­கையை மீறி கோத்­தா­பய வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­டு­கின்ற போதும் தமிழ்த்­த­ரப்­பு­களின் நிபந்­த­னைகள் ஏற்­கப்­ப­டாத பட்­சத்­திலும் அங்கும் பிள­வுகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்புகள் உள்ளன.

 மைத்திரிக்கான தெரிவு

இதேவேளை 2015இல் மஹிந்தவை தோற்கடித்தமையால் மீண்டும் அவருடன் கூட்டிணைவது தொடர்பில் அச்சமான மனநிலை ஜனாதிபதி மைத்திரிக்கு உள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் பிரதமர் ரணிலுடனும் இணைவதென்பது சாத்தியப்படாது. தனித்து போட்டியிடும் முடிவெடுக்கின்ற பட்சத்தில் சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபட்டு கட்சியின் தடமே இல்லாது போய்விடும் ஆபத்தும் உள்ளதாகக்கூறப்படுகின்றது. . ஆகவே இந்த இரண்டும் கெட்ட நிலையில் தன்னையும் தனது கட்சியையும் பாதுகாப்பதென்றால் நம்பிக்கையான தெரிவு மூன்றாவது அணி என்றே அவர் நம்புகின்றார் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்

இத்தகைய நிலைமைகளிலேயே மூன்றாவது அணிக்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.