தரவை பிள்ளையார் வீதி கடற்கரைப் பள்ளி வீதியானது

500வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி (கே.பி.எஸ்) தார்சாலையாக மாற்றியமைத்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதானது, இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ரசாக் என்பவர் தன்னுடைய படத்தைப் பெரிதாகப் போட்டு, கே.கே.பி.வீதி என்று பெயர் மாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் மனதிற்கு வேதனை தரக்கூடிய விடயம் என மாநகரசபை உறுப்பினரான சந்திரசேகரம் சாமுவேல்ராஜன் தெரிவித்தார். இதற்கு அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை வருடத்தின் முன்னர் கடற்கரைப் பள்ளி வீதி என பெயர்ப்பலகை வைக்கப்பட்ட போது, கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன்போது, நீதவான் நன்கு விசாரித்து, இது கடற்கரைப் பள்ளி வீதியல்ல. தரவைப் பிள்ளையார் வீதி என தீர்ப்பளிக்கப்பட்டது.