பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

“இந்த நூற்றாண்டின் கறை” என்பது சீனா அரசு அங்கு வாழும் உகூர் இன முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டுவரும் மத ரீதியான துன்புறுத்தலாம். கூறுவது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ.

அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் இந்த வாரம் இந்த கருத்தை தெரிவிக்கும்போது சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமைதியான வழிகளில் தமது காலாச்சார பாரம்பரிய இடமான கன்னியா வெந்நீர் ஊற்றினை மீட்கப் போராடிய தமிழ் மக்கள் மீது பௌத்த துறவிகளும், சிங்களவர்களும் கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளனர்.

அதாவது சீனா அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்காவுக்கு ஏனைய நாடுகள் அங்கு வாழும் சிறுபான்மை இனங்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மட்டும் கண்ணில் தெரிவதில்லை. ஆனால் அமெரிக்காவின் எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு சீனா தயாராகிவிட்டது. எதிர்த்து நிற்பதன் மூலமே தாம் தப்பிப்பிழைக்க முடியும் என்பது, வரலாறு சீனாவுக்கு கற்றுக்கொடுத்த பாடம். எனவே தான் அமெரிக்காவின் எதிர்ப்புக்களையும் மீறி சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.

அதனை சினோபெக் என்ற எரிபொருள் நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்வதன் மூலம் அரசியல் நெருக்கடிகளை தவிர்த்து பொருளாதார நிறுவனம் தொடர்பான நடவடிக்கையாக அதனை மாற்றி அமைத்துள்ளது சீன அரசு. இந்தியாவின் இந்தியன் அக்கோட் குழுமம் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்திற்குப் போட்டியாக சீனா தனது நிறுவனத்தை களமிறக்கியுள்ளது.chinaoil 1210 1 பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

ஆனால் சீனாவின் திட்டத்தில் இரண்டு இலாபம் உண்டு, ஒன்று உலகில் பயணம் செய்யும் சரக்கு கப்பலிகளில் மூன்றில் இரண்டு பங்கு கப்பல்கள் இந்து சமுத்திர கடற் பிரதேசத்தை அம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக கடந்தே செல்கின்றன. எனவே அவ்வாறு செல்லும் பெருமளவான கப்பல்களுக்கு எரிபொருளை வழங்குவதன் மூலம் வியாபாரத்தை பெருக்குவது, இரண்டாவது தனது முத்துமாலைத்திட்டத்தில் பயணிக்கும் தனது சரக்கு மற்றும் கடற்படைக் கப்பல்களின் எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதன் மூலம் தனது வழங்கல் பாதையை உறுதி செய்வது.

சிறீலங்கா விவகாரத்தில் சீனாவும் இந்தியாவும் தமக்கான இடங்களைத் தெரிவு செய்து தமது ஆளுமைகளை வலுப்படுத்தும் அதேசமயம், அமெரிக்கா அதன் முயற்சிகளில் முன்நகரமுடியாத நிலையிலேயே தற்போதும் உள்ளது.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை மனித உரிமை மீறல்கள் என்ற பதத்திற்குள் சுருக்கி அதனை கையில் எடுத்து தமிழ் மக்களை ஏமாற்றியது போல சிறீலங்கா அரசையும், இந்தியாவையும் ஏமாற்றுவதன் மூலம் சிறீலங்காவில் படைத்தளம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி இந்தியாவின் நேரடியற்ற எதிர்ப்பினால் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றது.

ஆனால் சீனா தனது அடுத்த நகர்வை சத்தமின்றி மேற்கொண்டுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை கடுமையான எதிர்க்காத இந்தியா அமெரிக்காவின் நடவடிக்கைகளை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் ஊடாக வெற்றிகரமாக முறியடித்துள்ளது. 1987 களில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொண்டது போன்ற ஒரு நகர்வையே இந்தியா தற்போது விரும்புகின்றது.

ஆனால் இந்த பூகோள நலன்சார் அரசியலில் தமிழ் இனத்திற்கான ஆதாயம் என்ன என்பது தான் பிரதான கேள்வி? நாம் எமக்கான தனித்துவத்தை இந்த பிரச்சனைக்குள் உள்நுழைக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு பலமான அரசியல் தளம் எம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது எம்மிடம் இல்லை.

தாயகத்திலும் புலத்திலும் அதற்கான ஏதுநிலை ஒன்று உருவாகுவதை சிறீலங்கா அரசு தனது புலனாய்வு அமைப்புக்கள் மூலம் சிதைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்க் குழுக்களையே அது பயன்படுத்தியும் உள்ளது. உதாரணமாக தற்போது மாற்று அரசியல் தளம் ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் உருவாகுவதை தடுப்பதிலும் தமிழ்க் குழுக்களே பின்னணியில் உள்ளன.107939890 c527a2d0 135d 4d41 857e dcab75b31332 பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிங்கள அரசு அதனைச் செய்யவில்லை. தாயகத்தில் தற்போது மக்கள் போராட்டம் மெல்ல மெல்ல உக்கிரம்பெற்று வருகின்றது. நீராவியடி பிள்ளையார் கோவிலிலும், கன்னியா வெந்நீர் ஊற்றிலும், காணாமல்போனவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்களிலும் அதனை நாம் காணலாம். ஆனால் அதனை சரியான வழியில் நகர்த்துவதற்கு பலமான அரசியல் அணி ஒன்று அவசியமானது. ஆனால் அதனை உருவாக்குவதில் தான் சிக்கல் தோன்றியுள்ளது.தற்போது சிறீலங்காவுக்கு சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான அதிகாரி கிளெமென்ட் நயாலெட்சோசி வூல் அவர்கள் தனது அறிக்கையை எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளார்.

சிறீலங்காவில் தமது உரிமைகளுக்காக சிறுபான்மை இனம் அமைதியாக ஒன்று கூடுவதற்குரிய சுதந்திரம் உள்ளதா என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கொண்டு அவருக்கு அறிக்கை மூலமாக விளக்கம் தர யார் முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்பது தான் தற்போதுள்ள வினா?image a2b8dda3a8 பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

அமைதியாக தமிழ் மக்கள் கூடும் இடங்களில் ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் குவிக்கப்படுகின்றது, தமிழ் மக்கள் மீது சிங்கள மதகுருக்களும், சிங்களவர்களும் கொதிநீரை ஊற்றுக்கிறனர், தமிழ் மக்கள் செல்லும் பேரூந்துகளின் சக்கரங்களில் இருந்து காற்று பிடுங்கப்படுகின்றது. தமிழ் மக்கள் கூடுவதை தடை செய்யும் சிங்கள நீதிமன்றங்கள் அதே இடத்தில் சிங்களவர்கள் கூடுவதை அனுமதிக்கின்றது.

ஆனால் இவற்றை எல்லாம் அந்த அதிகாரியிடம் எடுத்துக் கூறுவதையோ, அல்லது அதிகாரியை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சந்திப்பதையோ சிறீலங்கா அரசும் அதனைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் அதனையும் தாண்டி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது தளத்தில் உள்ள சமூக அமைப்புக்களினதும், ஏனைய தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளினதும் கடமை. அதனை நெறிப்படுத்தி, ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கவேண்டியது புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கடமை.

ஆனால் நாம் அதனை தவறவிட்டுவிட்டு, சிங்கள அரசினால் தனக்கு சாதகமாக பயன்படுத்தப்படும் அதிகாரிகள் ஐ.நாவில் சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு எதிராக ஐ.நா வாசலில் நின்று கோசம் போடுவதால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை, மாறாக பத்து ஆண்டுகள் கடந்து சென்றதைப்போல பதினோராவது ஆண்டும் கடந்து செல்லும் என்பதே யதார்த்தம்.