நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(4) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II) – பாகம் – 4)

அவுஸ்திரேலியா 1973-1975: இன்னுமொரு சுதந்திரமான தேர்தல் மண் கவ்வியது

அவுஸ்திரேலியாவின் தொழிற் கட்சிப் பிரதமராக விற்லம் என்பவர் 1972இல் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டார். 23 வருடங்களில் இதுவே முதல்முறையாக அவுஸ்திரேலியாவில் தொழிற் கட்சி ஒரு அரசாங்கம் அமைத்தது. பதவிக்கு வந்த உடன் விற்லம், அக்காலத்தில் ஐ-அமெரிக்காவின் கட்டளைக்கு கீழே வியட்நாமில் நின்ற, அவுஸ்திரேலிய படைகளை திரும்ப அழைத்தார். இராணுவத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்தினார். இராணுவத்தில் கட்டயாமாக இணைய மறுத்ததால் சிறையிடப்பட்டவர்களை விடுதலை செய்தார். வட-வியட்நாமின் அரசை அங்கீகரித்தார். அவருடைய அரசாங்கத்திலிருந்த பல அமைச்சர்கள் வட-வியட்நாமின் மேல் ஐ-அமெரிக்கா குண்டுகள் போடுவதை கடுமையாக விமர்சித்தனர்.800px Gough Whitlam 1972 policy speech நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(4) – தமிழில் ந. மாலதி

அக்கட்டத்தில், அவுஸ்திரேலியாவின் வெளி-புலனாய்வுப் பிரிவான ஆசிஸ், சிஐஏ உடன் சிலிநாட்டில் அந்நாட்டின் தலைவரான் அலன்டே அரசுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருந்தது. இதை உடனடியான நிறுத்தும்படி விற்லம் ஆசிஸ்-க்கு உத்தரவிட்டார். இருந்தாலும் சில மாதங்களுக்கு பின்னர் அலன்டே அரசை சிஐஏ வீழ்த்திய காலத்திலும் ஆசிஸ் சிஐஏ உடன் வேலை செய்வதை நிறுத்தவில்லை. பிரதமர் விற்லம் ஆசிஸ் மற்றும் அதன் சகோதர நிறுவனமான ஆசியோ-வுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தார். ஆசிஸ் இடமிருந்து சிஐஏ-க்கு அதுபற்றி பல தந்திகள் பறந்தன.

கிரேக்க நாட்டினதும் சிலி நாட்டினதும் இராணுவங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தவர்களுக்கு, அவுஸ்திரேலியாவில் பிரஜா உரிமை கொடுக்க அவுஸ்திரேலியா மறுத்து வந்தது. விற்லம் இதையும் மாற்றினார்.

பிரதமரின் இவ்வாறான நடவடிக்கைகளால் சிஐஏ கலக்கம் அடைந்தது. அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டிருந்த அதன் இராணுவ தளங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தது. பல ஆயிரம் பேர்களை வேலைக்கு வைத்திருந்த முக்கியமான இந்த இராணுவத் தளங்களில், ஐ-அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல்கள் சார்ந்த நேவியின் தொடர்பு வசதிகளும் இருந்தன. 60களில் அமைக்கப்பட்ட இவ்வசதிகள் மிகுந்த இராகசியமாக பேணப்பட்டன. வெளிவிவகார அமைச்சில் ஆழமாக வேலை செய்பவர்களுக்குக் கூட இதுபற்றி தெரிந்திருக்கவில்லை. இவற்றிற்கும் சிஐஏ-க்கும் உள்ள சம்பந்தம் ஒருபோதும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பிரபலமான அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள் பற்றிய பாதகமான தகவல்களை பல வருடங்களாக ஆசியோ சிஐஏ-க்கு வழங்கி வந்திருக்கிறது என்று 1976 இல் ஒரு அவுஸ்திரேலிய கமிசனின் விசாரணை தீர்ப்பு சொன்னது. இவ்வாறு பரிமாறப்பட்ட தகவல்களில் அவர்களின் கலகக்கார குணாம்சங்களும் அவர்களின் வரம்புமீறிய சொந்த வாழ்க்கை நடத்தைகளும் அடங்கியிருந்தது.

1975 இல் விற்லம் ஆசியோ மற்றும் ஆசிஸ் நிறுவனங்களின் தலைவர்களை வெவ்வேறு கட்டத்தில் அவர்களின் பதவியிலிருந்து நீக்கினார். ஆசிஸ் நிறுவனம் கிழக்கு தீமோரில் சிஐஏ இனது மறைமுக நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததுவே அதன் தலைவரை விற்லம் நீக்கியதிற்கான காரணம். சில மாதங்களின் பின்னர் சிஐஏ இல் வேலை செய்யும் ஒருவர் அவுஸ்திரேலிய எதிர்கட்சி ஒன்றிற்கு நிதி கொடுத்ததாக செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.Australian Secret Intelligence Service நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(4) – தமிழில் ந. மாலதி

இவற்றை எல்லாம் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் இராணுவ புலனாய்வுத்துறை பல நடவடிக்கைகளில் இறங்கியது. கவர்னர் ஜெனரலாக அப்போது இருந்த சார் ஜோன் கேர் ஐ இராணுவ அமைச்சின் தலைவர் சந்தித்தார். இச்சந்திப்பின் பின்னர் அவர் வெளியிட்ட செய்தி: ‘இப்போது நடப்பவைகள் நாட்டின் பாதுகாப்புக்கு என்றும் இல்லாத பெரும் ஆபத்தை கொண்டு வந்திருக்கிறது’. இதுவே ஒரு மூன்றாம் உலக நாடாக இருந்தால் ஏற்கனேவே சிஐஏ அந்த அரசை பதவியிலிருந்து இறக்கியிருக்கும்.

இதைத் தொடர்ந்து வாஷிங்கடனில் இருக்கும் ஆசியோ நிறுவனத்தின் ஆபிஸ், சிஐஏ இன் வேண்டுகோளின் பேரில் அவுஸ்திரேலியாலிலுள்ள தனது தலைமைச் செயலகத்திற்கு செய்தி அனுப்பியது: ‘சிஐஏ பற்றி தொடர்ச்சியாக இப்போது சொல்லப்படுபவைகள், சிஐஏ இன் தளங்கள் பற்றிய மறைமுக திரையை கிளிப்பதாகவே முடியப் போகிறது.’ இச்செய்தி பரிமாற்றங்கள் கவர்னர் கேரையும் உள்ளடக்கியிருக்கும். இச்செய்தி வந்து சில நாட்களில் அவர் விற்லம் அரசை நீக்கி ஒரு தற்காலிக அரசை நிறுவினார். முன்னர் ஒரு போதும் நடவாத இச்செயலை பலரும் அவுஸ்திரேலிய சாசனத்தின் மெய்ப்பொருளுக்கு எதிரானது என்று விமர்சித்தார்கள்.

இதற்கு கவர்னர் கேர் உடந்தையாக இருந்தார் என்பதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கவர்னர் கேர் சிஐஏ இன் பின்புலம் கொண்ட நிறுவனங்களில் பல வருடங்கள் நெருக்கமாக பணியாற்றி இருக்கிறார். 1950 களில் ‘கலாச்சார சுதந்திரத்திற்கான ஆவுஸ்திரேலியா சங்கம்’ என்ற அமைப்பின் இயக்குனர் குழுவில் இருந்தார். இந்நிறுவனம் சிஐஏ இன் ‘கலாச்சார சுதந்திர மாமன்றம்’ என்ற நிறுவனத்திலிருந்து கிளை விட்டது. ‘குவாட்றன்ட்’ என்ற கடும் வலதுசாரி அவுஸ்திரேலிய பத்திரிகையில் இவர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

சிஐஏ செய்தி பரிமாற்றங்களை தொடர்ச்சியாக பார்க்கக் கூடிய வேலையிலிருந்த கிறிஸ் பொயிஸ் என்பவர் ‘கவர்னர் கேர் விற்லமை நீக்கியது பற்றி சிஐஏ இல் கொண்டாட்டங்கள் இருந்தது’ என்று அறிவித்தார். சிஐஏ அவுஸ்திரேலிய தொழிற்சங்கங்களுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அதன் தலைமைகளை கையில்போட்டு வேலைநிறுத்த போராட்டங்களை தடுத்ததாகவும் இவர் மேலும் அறிவித்தார்.

பின்னர் நடைபெற்ற தேர்தலில் விற்லம் தோல்வியடைந்தார்.

இன்னுமொரு சிஐஏ வேலையையும் இங்கு குறிப்பிட வேண்டும். சிட்னியில் இயங்கிய நூகன் ஹான்ட் வணிக வங்கி ஒரு சிஐஏ வங்கிதான். இது நூகன் என்ற ஒரு அவுஸ்திரேலியராலும் ஐ-அமெரிக்காவின் கிறீன் பெரட்டில் வியட்நாமில் பணி செய்து சிஐஏ விமான சேவையான ஏயர் அமெரிக்காவிலும் பணி செய்த ஹான்ட் என்ற அமெரிக்கராலும் சேர்ந்து 1973 இல் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த சில வருடங்களில் இது அதீத வளர்ச்சி அடைந்தது. இதன் கிளைகள் சவுதி அரேபியா, ஹம்பேக், மலேசியா, தாய்லாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், அர்ஜன்ரீனா, சிலி, ஹவாய், வாஷிங்டன், அனபோலிஸ், மேரிலான்ட் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டது. இவை சிஐஏ, கிறீன் பெரட் போன்ற நிறுவனங்களில் அனுபவம் பெற்றவர்களால் நடத்தப்பட்டது. இவ்வங்கியின் செயற்பாடுகளும் விரிவடைந்தன.jed நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(4) – தமிழில் ந. மாலதி

இவ்வங்கியின் செயற்பாடுகளின் சில உதாரணங்கள்: போதைமருந்து கடத்தல், சர்வதேச ஆயுத வணிகம், கிறிமினல் அமைப்புக்களுடன் உறவு, இந்தனேசியாவின் தலைவராக இருந்த சுகாட்டோவுக்காக பண மோசடி, பிலிப்பைன்ஸ்ஸின் தலைவர் மார்கோசுக்கும் அவர் மனைவிக்கும் பல சேவைகள் செய்தல், இரானின் ஷா குடும்பத்திற்கு இரானிலிருந்து நிதியை வெளியே எடுக்க உதவுதல், சிஐஏ நிதியை ஐ-அமெரிக்காவுக்கு ஆதரவான ஐரோப்பிய அரசியல் கட்சிகளுக்கு கிடைக்க செய்தல், அவுஸ்திரேயா லிபரல் கட்சிக்கு 2.4 மில்லியன் பணத்தை கிடைக்க செய்தல், கிறிமினல் அமைப்புக்களை விசாரணை செய்த அலுஸ்திரேலிய அமைச்சரை பிளக் மெயில் பண்ணியது (சுவிஸ் வங்கியில் இவர் பெயரில் கணக்கு திறந்து அதை பற்றிய செய்தியை கசிய விடுவதாக வெருட்டியது), இன்னும் பல இத்தகைய சேவைகள்.

இதையும் விட பல மர்மமான கொலைகளும் இவ்வங்கியோடு தொடர்புபடுத்தப்பட்டன. அதில் மேரிலான்டிலிருந்த முன்னாள் சிஐஏ ஆபிசர் ஒருவர். 1980 ஜனவரியில் இவ்வங்கியை ஆரம்பித்த நூகன் அவர் காரில் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார். அதே ஆண்டு ஜூன் மாதம் வங்கியை ஆரம்பித்த இரண்டாவது நபர், ஹான்ட் காணாமல் போய்விட்டார். அத்துடன் அந்த வங்கியும் 50 மில்லியன் டாலர் கடனுடன் மூடப்பட்து.