வவுனியா பிரதேச செயலகத்தில் பிரித் ஓதும் நிகழ்வு

வவுனியா பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 6 மணியளவில் பிரித் ஓதும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் பிரதேச சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும், நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் வெண்ணிற ஆடை அணிந்து வருமாறும்  பிரதேச செயலர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதேச செயலாளர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை அனைத்து பிரதேச சபை கிளை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

வவுனியா பிரதேச சபை தமிழர்களுக்குரிய பிரதேச சபையாகக் காணப்படும் போது அங்கு எதற்காக பிரித் ஓதும் வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் பௌத்த மதத்தினரின் வழிபாட்டு உடையான வெள்ளை ஆடையை அணியவும் பணிக்கப்பட்டுள்ளனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு திணிப்பாகும்.

வவுனியா மாவட்டத்தில் பல இடங்களிலும் பௌத்த சின்னங்கள் பிரதிஸ்டை செய்யப்படுவதும், சிங்களவர்கள் குடியேற்றப்படுவதும் இடம்பெற்று வருகின்றமை இங்கு கருத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது.