கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை பறித்து முஸ்லிம் குடியேற்றங்கள் – வடக்கில் சொன்ன தேரர்

கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைப் பெயர்மாற்றம் செய்து முஸ்லிம் குடியேற்றங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபித்துள்ளார்,இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் போன்றவர்கள் எதுவும் பேசாமல் மெளனம் காத்து நிற்பதாகவும் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோதே தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத் தமிழ் மக்களை கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாக்கி வருகின்றனர்.

தவிர, கிழக்கிலுள்ள ஒரு பகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் தமிழ் மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்வதிலும் ஏழைத் தமிழ்ப் பெண்களை வர்த்தக நிலையங்களில் பணி நிலைக்குச் சேர்த்துவிட்டு, பின்னர் அவர்களுக்குத் தொந்தரவு செய்வதும் அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மத மாற்றம் செய்வதுமான பெரும் கொடுமை நடந்தாகிறது.

இதுபற்றி கிழக்கு மாகாணத்துத் தமிழ் மக்கள் கண்ணீரோடு கூறுவர்.

எனினும் இந்த நாசகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தர் வாய் திறந்ததில்லை என்பதுதான் அதிகமான உண்மை.

கிழக்கு மாகாணத்தை தங்களுக்கான மாகாணமாக மாற்றுகின்ற கயமைத்தனத்தில் ஒரு குறிப்பிட்ட முஸ்லிம்கள் மும்முரமாக இருக்கையில்,

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் போன்றவர்கள் எதுவும் பேசாமல் மெளனம் காத்து நிற்கின்றனர்.

தமிழர்களுக்கு வாய்த்த அரசியல் தலைமை காரணமாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருந்தனர்.

நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ் மக்களின் நிலங்களை பெயர்மாற்றம் செய்து அந்த நிலங்களில் முஸ்லிம் குடியேற்றங்களை ஹிஸ்புல்லாஹ் செய்தார் என்ற உண்மையை அத்துரலிய ரத்ன தேரர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

தலைமை கூறாத உண்மையை, அத்துரலிய ரத்ன தேரர் கூறியதன் மூலம்; கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழ் மக்களை விரட்டுகின்ற செயற்பாடு படிப்படியாக நடந்து வருகிறது என்ற உண்மை உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அத்துரலிய ரத்ன தேரர் கூறிய உண்மைச் சாட்சியத்தோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் உசார் அடைந்து பறிக்கப்பட்ட தங்களின் நிலங்களை மீட்பதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டும்.

அருமையான இந்தச் சந்தர்ப்பத்தை கிழக்கு மாகாணத் தமிழ் மக்களும் பொது அமைப்புகளும் தவறவிடாமல் பயன்படுத்த வேண்டும்.