சிறீலங்கா காவல்துறையில் தமிழ் இளைஞர், யுவதிகள்

வடமாகாணத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கால்துறைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில், தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் த.கணேசநாதன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையால் தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக பெண்கள் தங்கள் பிரச்சினைகளை காவல்துறையினரிடம் தெரிவிப்பதற்கு மொழி பெரும் பிரச்சினையாக  உள்ளதாகவும், இதனால் சட்டத்தை அமுல்ப்படுத்துவதில் காவல்துறை அலுவலகம் பெரும் சவாலை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

இதற்குத் தீர்வாகவே இம்முறை வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் இளைஞர்கள், யுவதிகளை காவல்துறை திணைக்களத்தில் இணைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் த.கணேசநாதன் மேலும் தெரிவித்தார்.