செய்மதி ஊடாக சிறீலங்காவைக் கண்காணிக்க ஜப்பான் முயற்சி?

இன்று திங்கட்கிழமை, சிறிலங்காவின் முதலாவது செய்மதியான ராவணா 1 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது செய்மதியாக இது கருதப்படுகின்றது என ஆதர் சீ. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது புவியிலிருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள விண்ணிற்கு இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு செலுத்தப்படுகின்றது.

ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த செய்மதிக்கு ராவணா 1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிறீலங்காவுக்கு உதவிகளை மேற்கொள்வதன் மூலம் அங்கு தமது ஆதிக்கத்தை செலுத்தும் போட்டியில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் ஜப்பான் களமிறங்கியுள்ளது. முன்னர் சிறீலங்காவுக்கு அதிக நிதி உதவிகளை வழங்கிவந்த ஜப்பான் தற்போது தொழில்நுட்ப உதவிகள் என்ற போர்வையில் தனது கண்காணிப்பை இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த முற்பட்டுவருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.