அரசின் தவறான நவடிக்கைகளால் மீனவ சமூகங்கள் பாதிப்பு-சாள்ஸ் நிர்மலநாதன் 

24
44 Views

இலங்கை அரசின் தவறான நவடிக்கைகளால் அனைத்து மீனவ சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  குற்றம் சட்டியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் தீபற்றிய  நிலையில் மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான கழிவு  பொருட்கள் என்று சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(11) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்  மற்றும் மீன்பிடி திணைக்களத்தினர் கடற்படையினர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் சாள்ஸ் நிர்மலநாதன் மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து தெரிவிக்கும் பொழுது, அரசாங்கத்தின் தவறான நடவடிக்கையினால் இலங்கையின் அனைத்து மீனவ சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வங்காலை  கிராமத்து மீனவர்கள்  கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எறிந்த கப்பலில் இருந்து இரசாயன பொருட்கள் தங்களுடைய கடற்பகுதியில் கரை ஒதுங்குவதாக தெரிவித்து உடனடியாக வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார்கள்.

நான் இங்கு வந்து பார்வையிட்டபோது கிடைக்கப்பெற்ற இரசாயன கழிவு பொருட்கள் கப்பலின் இருந்து வெளியானவை என்பது உறுதிபடத் தெரிகின்றது.உண்மையில் இந்த விடயம் அரசாங்கத்தினுடைய அசமந்தப் போக்கு காரணமாகவே ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் தெரியாமல்  இந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களால் மீனவ சமூகம் மாத்திரமல்ல அனைத்து மக்களும் மிகவும் பாரியதொரு அச்சத்தில் இருக்கிறார்கள்.

மன்னாரில் கொக்குப் படையான் முதல் தலைமன்னார் வரைக்கும் இந்த இரசாயன பொருட்கள் கரைய தஙகுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஆகவே அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவ மக்கள் குறிப்பாக இந்த வீதித் தடை காலத்தில் பிடிக்கின்ற மீன்களை சந்தைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் காற்று வேகமாக அடிக்கும் காலமாக இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு மக்களுக்கு உடனடியாக மேலதிகமான நிவாரணங்கள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here