இந்தியாவிலிருந்து வந்ததாக முள்ளியவளை இளைஞர் பொலிசாரால் கைது

78
126 Views

கடல் வழியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாக இளைஞர் ஒருவரை முள்ளியவளை பொலீசார் இன்று 10.06.21 கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பலர் வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இத் தகவலையடுத்து, மாவட்டங்கள் தோறும் தேடுதல் மேற்கொண்ட அரசபுலனாய்வு பிரிவினர், முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞன்  ஒருவரைக் கைது செய்துள்ளனர். இவர் எப்போது எவ்வாறு வந்தார் என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் முள்ளியவளை பொலீசாரல் கைதுசெய்யப்பட் குறித்த இளைஞன்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here