கொரோனாவை ஒழிக்க உதவுங்கள் – பிரிட்டன் தூதுவரிடம் சஜித் வேண்டுகோள்

107
192 Views

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவியை வழங்குமாறு பிரிட்டன் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த சில நாள்களாக வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களைச் சந்தித்து உதவிகளைக் கோரி வருகின்றார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி மருத்துவர் ஒலிவியா நிவேராஸ், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கினொன் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோருடனும் சஜித் பிரேமதாஸ சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here