இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் – I.H.M.E எச்சரிக்கை

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா  தொற்றால் நாளாந்தம் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான (University of Washington’s Institute for Health Metrics and Evaluation) I.H.M.E தெரிவித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து வோசிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்தசுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்மீ தெரிவித்துள்ளது.
செப்டம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் 20876 பேர் கொரோனாவைரசினால் உயிரிழப்பார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன்14 ம் திகதியளவில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடையும் நாளாந்தம் 264 பேர் கொரோனாவினால் உயிரிழப்பார்கள் என்றும் கூறியுள்ளது. எனினும் பின்னர் இந்த உயிரிழப்புகள் நாளாந்தம் 88 ஆக குறைவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
ஜூன் 16 ம் திகதியளவில் மருத்துவமனை பயன்பாடு உச்சத்தை அடையும் என்றும் I.H.M.Eதெரிவித்துள்ளது.
இலங்கையில் இது வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.