கட்டுப்பாட்டை மீறிப்பரவும் கோரோனா – நேற்று மட்டும் 1,923 பேருக்குத் தொற்றியது

22
25 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. நாளொன்றில் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றுப் பதிவாகியுள்ளனர். நேற்று 1,923 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500ஐக் கடந்துள்ளது. கடந்த 5 நாள்களில் 8 ஆயிரத்து 723 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 676 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா நோயாளர்களில் 98 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 14 ஆயிரத்து 758 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here