உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பெரும் அரசியல் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மதத் தீவிரவாதத்தினால் நடத்தப்பட்டதல்ல. அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருக்கின்றார்.

உயிர்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு கொழும்பு பொரளை கனத்தையிலும், மாதம்பிட்டியிலும் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை நேற்றைய தினம் திறந்துவைத்த பின்னர் கருத்து வெளியிட்டபோதே கர்தினால் இவ்வாறு தெரிவித்தார்.

“மதத் தீவிரவாதத்தினால் எமது சகோதரர்கள் தாக்கப்படவில்லை. அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காக மதத் தீவிரவாதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது” எனவும் அவர் அங்கு குற்றஞ்சாட்டினார்.

“இந்தத் தாக்குதலில் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருப்பது என்னவென்றால், இதற்கு மதத் தீவிரவாதம் காரணமாக இருக்கவில்லை. சில குழுவினர் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட முயற்சியின் பலன்தான் இது” எனவும் கர்தினால் தெரிவித்திருக்கின்றார்.