முத்தையா முரளீதரனுக்கு திடீர் சுகவீனம் – சென்னை மருத்துவமனையில் அவசர சிகிச்சை

52
88 Views

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை முரளிதரன் மேற்கொண்ட நிலையில், சிகிச்சை முடிந்த பிறகு, தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் மீண்டும் ஹைதராபாத் அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் வட்டாரத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முத்தையா முரளிதரன் தற்போது ஐதராபாத் சன் ரைசஸ் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here