பேனாவை நட்டு, விவசாயம் – கண்டி மாணவியின் கண்டுபிடிப்பு

31
68 Views

நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் (pen) மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டிப் பகுதியைச் சேர்ந்த சச்சினி கிறிஸ்டினா சுகிர்தன் என்பவர்களே அவர்களாவர். இவர்கள் சர்வதேச ஊடகம் ஒன்றுக்குத் தெரிவிக்கையில்,

“இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அதற்கான மாற்றுத் திட்டத்தை சிந்தித்தேன். பின் எனது தந்தையுடன் ஆலோசித்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக இயற்கை முறையில் மரக்கன்றுகள் வளரும் வகையில் பேனாக்களை தயாரிக்க ஆரம்பித்தேன்.

முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பேனாவில், சிறிய வகையிலான செடிகள் மாத்திரமே வளரும். பேனாவில் உள்ளடக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்தும், உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, பேனாவுக்குள் அடைக்கப்படும். இந்த பேனாவின் பின்புறத்தில் மரக்கறி, பூக்கன்று மற்றும் ஆயர்வேத செடிகளின் விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பேனாவின் பின்புறத்தில் இருந்தே, இந்த செடிகள் துளிர்விட ஆரம்பிக்கின்றன. இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.” எஎன்றார். மேலும் எதிர்வரும் காலங்களில் பெரிய மரக்கன்றுகள் வளரும் வகையில், இந்த பேனாவை தயாரிக்க தானும், தனது தந்தையும் எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டினா  கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here