வவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், ‘மரம் நடுகையும்’

66
119 Views

வவுனியாவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், மரம் நடுகையும் இன்று இடம்பெற்றது.

வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் ஆத்ம சாந்தி நிகழ்வும் மரநடுகை நிகழ்வு கிரம சேவையாளர் சர்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பபட்டதுடன், மறைந்த நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரம் நடுவோம் எனும் பெருங்கனவினை நனவாக்கும் முகமாக  மரம் நடுகை செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மரக்காரம்பளை கிராம சேவகர் நா. சிறிதரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், மற்றும் சமூக ஆர்வலகர்கள், சுயாதீன இறைஞர்கள் அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர்கள், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here