துறைமுக நகர ஆணைக்குழு இறைமையை மீறுகின்றது – நீதிமன்றில் மனு தாக்கல்

உத்தேச துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக பல தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கியதேசிய கட்சி ஜேவிபி உட்பட பல தொழிற்சங்கங்கள் உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர். மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய அமைப்புகளும் மனுதாக்கல் செய்துள்ளன.

கொழும்புதுறைமுக நகர திட்டம் பொருளாதார ரீதியில் நாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததுஇஅதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் நாட்டிற்கு பெரும்பொருளாதார நன்மை கிடைக்கும் என குறிப்பிட்ட தரப்புகள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளன.

உத்தேச போர்ட் சிட்டி ஆணைக்குழு சட்டமூல நகல் இலங்கையின் இறைமைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டிளையும் மீறுகின்றது என மனுவில் பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போர்ட்சிட்டி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் முடிவை ஆணைக்குழுவிடமே கையளிப்பதன் காரணமாக இந்த சட்ட மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கும் ஸ்திரதன்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது என பல தரப்பினரும் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.