மணிவண்ணனின் கைது எமக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது – மனோ

84
139 Views

யாழ் மேயர் தம்பி மணிவண்ணன் கைது செய்யப்பட்டமையை, தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையாக கண்டிக்கிறது என அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல விளக்கம் கோரும் சட்டபூர்வ நடவடிக்கையை வடமாகாண ஆளுனர் எடுத்து, நிதானமாக நடந்துக்கொண்டிருக்க வேண்டும்

ஆனால் அவரது கைதை கண்டித்து, ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க முன்னர், தமிழ் மகாஜனம், தனது முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த கைது அரசாங்கத்தினரை மட்டுமல்ல, நம்மவர்கள் சிலபலரையும் திருப்தியடைய செய்திருக்கிறது என நான் அறிகிறேன்.

கோபத்துடனும், மனவருத்தத்துடனும் ஒருசேர இதை இப்போது ஒரு தமிழ் இலங்கையனாக கூறுகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here