படையினரின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – செ.கஜேந்திரன்

63
139 Views
பொதுமக்களிடமிருந்து படையினர் அபகரித்த காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள்,
பருத்தித்துறை தபாலகத்திற்குரிய காணியை படையினரிடமிருந்து விடுவித்து தபாலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அத்துடன் எழுதுமட்டுவாளில் 50 ஏக்கர் தனியார் காணியில் உள்ள 52ஆவது படைபிரிவு அமைந்துள்ள காணியை உரிமையாளரான மகேஸ்வரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் கிளிநொச்சி பிரதேச சபையின் நூல்நிலையத்திற்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறும், மொறக்கொட்டாஞ்சேனை பாடசாலை காணியை விடுவிக்குமாறும் கூட்டமைப்பு உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த ஆலோசனை குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here