வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 87 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

32
52 Views

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி, அவர்களது உறவினர்கள், பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் அவர்களின் உறவினர்கள், சொல்லெண்ணா துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிய ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள்

இவ்வாறு தமது உறவுகளைத் தேடியலைந்து 87 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் . வவுனியா மாவட்டத்தில் 17 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேசத்தின் தலையிடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here