11 முஸ்லீம் அமைப்புகளைத் தடை செய்ய சட்டமா அதிபர் அனுமதி

135
197 Views

11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு   நாள் அன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகளில்  குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர். இதனால் 260க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு புர்கா அணிவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இருக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மதராஸாக்கள் விரைவில் மூடப்படும் என அமைச்சர் சரத் வீரசேகரா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐஎஸ், அல்ஹைதா உட்பட இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்வதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் தனது  அனுமதியை வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிசார ஜயரட்ண இதனைத் தெரிவித்துள்ளதுடன் தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்பு காரணமாகவே இந்த அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக  குறிப்பிட்டுள்ளார்.

1.ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)

02.சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)

03.சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ)

04.அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)

05.ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா (JASM)

06.தாருல் அதர்-ஜம்உல் அதர்

07.சிறிலங்கா இஸ்லாமிய மாணவர் சங்கம் -ஜமியா (SLISM)

08.ஐஎஸ் அமைப்பு (ISIS)

09.அல்கொய்தா (AL-Qaeda)

10.சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு (Save the pearls)

11.சுப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here