‘தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்  மறைந்த ஆயர்’ – சபையில் கூட்டமைப்பு அஞ்சலி

60
111 Views

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உலக நாடுகளுக்கு தமிழ் மக்களின் சாட்சியாக தன்னை பதிவு செய்தவர் மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, சபையின் அனுமதி பெற்று மறைந்த ஆயருக்கு அவர் அஞ்சலி செலுத்தி உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் யுத்த காலங்களில் எமது மக்கள் எதிர்கொண்ட ஆபத்துக்களை  எதிர்த்து நின்று மக்களுக்காக குரல் கொடுத்தவர். அவருடைய இழப்பு தமிழ் மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும்  ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும் என்று அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here