ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு இறுதி அஞ்சலி – வலி கிழக்கில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டது பிரதேசசபை

37
90 Views

மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் தமிழ்த் தேசிய மனித நேயப்பணியை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆலுவலகங்களிலும் பொது இடங்களிலும் கறுப்புக்கொடிகள் பிரதேச சபையினால் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஆயரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ள இன்றைய தினத்தினை (திங்கட்கிழமை) துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு சமயங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த மறைந்த ஆயரை அஞ்சலிக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here