தேவாலயங்களின் பாதுகாப்புக்காக 12,000 படையினர் களமிறக்கம்

உயிர்த்த ஞாயிறு நாளைய தினம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள தேவாலயங்களின் பாதுகாப்புக்காக 12,000 படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

9,356 பொலிஸார், 146 விஷேட அதிரடிப்படையினர், 1,711 இராணுவத்தினர், 426 கடற்படையினர், 405 விமானப் படையினர் இதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நேற்று பெரிய வெள்ளிக்கிழமை முதல் நாளை உயிர்த்த ஞாயிறு தினம் வரையில் இவர்கள் நாடு முழுவதிலுமுள்ள தேவாலங்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதன்படி மொத்தமாக 12,040 பாதுகாப்புப் படையினர் நாடு முழுவதிலுமுள்ள தேவாலயங்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.