தமிழினம் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு கடமைப்பட்டதாக இருக்கின்றது- கோவிந்தன் கருணாகரம்

தமிழினம் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு கடமைப்பட்டதாக இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமையை எமது இனத்தின் துக்ககரமான நாளாகப் பிரகடணப்படுத்தி முடிந்தளவு எமது வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும் வெள்ளைக் கொடிகளையோ கறுப்புக் கொடிகளையோ பறக்க விட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலகள் மிக விரைவில் நடத்தப்பட்டு அந்த அந்த மாகாண மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய ஒரு சூழலை இந்த அரசு ஏற்பத்திக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்புகொண்டு உங்களை இந்த கூட்டத்திற்கு அழைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள்,அதனால் அந்த கூட்டத்திற்கு சமுகமளிக்கவேண்டாம் என்று கூறினார்.பின்னர் நேற்று வியாழக்கிழமை காலையில் தொலைபேசியில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதனை கூறினாரா அல்லது இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்ந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் இருக்கின்றார், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் இருக்கின்றார். யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.