யாழில் இருந்து வவுனியா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

81
148 Views

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேரூந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 249 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸுக்கு மேலும் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 140க்கும் மேற்பட்டவர்கள் இத் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில்   யாழ்.கல்வி வலயப் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 88ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேரூந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக காவல்துறையினர்  மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா ஊடாக பயணிக்கும் பேரூந்துகளை வழி மறித்து வவுனியாவில் இறங்கவுள்ள பயணிகளிடமே குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகளுடாக வவுனியாவிற்கும் தொற்று பரவுவதை தடுப்பதற்கே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here