இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

74
144 Views

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது வரையில்  497 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 376 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது.

இதவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here