யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி வேண்டி, நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பலரும் தமது ஆதரவினை தெரிவித்து இனைந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தின் கோரிக்கைகளாவன…

1-சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறீலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

1614584289 br 1 copy யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

2-தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைது குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.