சிறீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -அமெரிக்கா

சிறீலங்காவில், கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி  இம்முறை கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உலக நாடுகளின் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துவதிலும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதிலும் அமெரிக்க நீண்ட ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், மீண்டும் இணைந்து அந்த பணிகளை ஊக்கப்படுத்த அமெரிக்கா ஆர்வத்துடன் உள்ளது.

பல நாடுகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படை தன்மையை  வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவதோடு மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அமெரிக்கா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளார்.