இன்று கொழும்பு வரும் இம்ரான் கான் – முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்பு ரத்து?

10
13 Views

 

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புக்களை நடத்தவுள்ளார். ஹக்கீம் எம்.பி., ரிஷாத் எம்.பி. ஆகியோருடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய் யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை அண்மையில் சந்தித்து, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர்கலந்துரையாடியிருந்தார். இதன்போது பாகிஸ்தான் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தனர். இதன்படி குறுகிய நேரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சந்திப்பு நடை பெறாது எனபாகிஸ்தான் தூதுவரால், மேற்படி இரு தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இராஜதந்திரவட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சந்திப்பு இரத்தானமைக்கான காரணம் வெளியாகாத போதிலும், அரச உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவ்வாறு நடந்திருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here