ஜெனிவாவில் இலங்கை போரிடாமல் சரணடையாது – வெளிவிவகார செயலாளர் கொலம்பகே

10
13 Views

 

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை தர்க்க ரீதியான உண்மைகளுடன் மனித உரிமை பேரவையில் தனது கரிசனைகளை முன்வைக்கவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தகவல்களில் உண்மைகள் சட்டத்தில் பிழைகள் பார்வையில் பிழைகள் காணப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்க அவர் தெரிவித்துள்ளார்.

‘இது முற்றிலும் ஒரு நாட்டின் உள்விவககாரம், நீங்கள் இதனை செய்துள்ளீர்கள் ஏன் இதனை செய்தீர்கள் என தெரிவிப்பதற்கு இன்னொரு ஸ்தாபனத்திற்கு என்ன உரிமையுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் காரணமாகவே நாங்கள் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் போரிடாமல் சரணடைவதற்கு தயாரில்லை, நாங்கள் காணாமல்போனவர்களின் அலுவலகம் தொடர்ந்தும் இயங்குவதை விரும்புகின்றோம், இழப்பீடு தொடர்பான அலுவலகத்தினை தொடர்ந்தும்வைத்திருப்பதற்கு விரும்புகின்றோம்” எனவம் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here