பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதாக ஜெனிவா தீர்மானம் – பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் கவனத்தை செலுத்துவதற்காக பிரித்தானியா இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கும். மனித உரிமை பேரவை தனது பணியை முழுமையாக செய்யவேண்டும்’ என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப அமர்விற்கான அறிக்கையில் அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

‘இலங்கையையும் சிரியாவையும் பிரித்தானிய அரசாங்கம் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ள டொமனிக் ரப், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கவனத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்காக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம் எனவும் அவர்n தெரிவித்துள்ளார்.

மனிதஉரிமைகளை திட்டமிட்ட அடிப்படையில் மீறுபவர்களை பொறுப்புக்கூறச்செய்யும் வலுவான சர்வசே அமைப்பினை நாங்கள் விரும்புகின்றோம். மனித உரிமை பேரவை தனது பணியை முழுமையாக செய்யவேண்டும். அல்லது அதன் நற்பெயர் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.