ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்தது சிறீலங்கா

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசேல் பசெலற் இனால் வெளியிடப்பட்ட அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது.

ஆணையாளரின் 17 பக்க அறிக்கைக்கு 30 பக்க அறிக்கையாக தனது பதிலை வெளியிட்டுள்ள சிறீலங்கா அரசு ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதல், அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை செய்தல் போன்றவற்றிற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ளது.