புதிய உருமாறிய கொரோனா வைரஸ் சிறீலங்காவில் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அதிகம் பரவும்  தன்மை கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B-1.1.7 பரம்பரை) நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B-1.1.7 பரம்பரை) அதிகம் பரவும் தன்மை கொண்டது.

இந்நிலையில், மஹியங்கனையில் இரு தொழிற்சாலைகளில் பரவிய கொரோனா தொற்று மற்றும் பி.சிஆர் இயந்திரங்கள் பழுதானமை காரணமாகவே அண்மைய நாட்களில் கொரோனா நோயாளர்கள் அதிகம் பதிவாகினர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.