மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த அனைத்துலக பிரதிநிதிகளின் கருத்துக்கள் – பிரபா

இம் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் – ஓர் தொகுப்பு

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பிரித்தானியா ஆதரவு வழங்கும் – ஜூலியன்

David Griffiths Director AI மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த அனைத்துலக பிரதிநிதிகளின் கருத்துக்கள் - பிரபா

எதிர் வரும் 22ம் திகதி இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை பிரித்தானியா கருத்தில் கொள்வதுடன், அதற்கான ஆதரவையும் வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், மக்களுக்கு நீதி கிடைக்கவும் எதிர்வரும் கூட்டத்தொடரில் பிரித்தானியா தனது ஆதரவுகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது பரிந்துரைகளை ஆணைக்குழு நிறைவேற்ற வேண்டும் – மன்னிப்புச் சபை

See the source image

எதிர்வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியா ஒரு காத்திரமான தீர்மானத்தை முன்வைக்க வேண்டும். அதனை நடைமுறைப்படுத்துவதில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிக அக்கறை காண்பிக்க வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் பணிப்பாளர் டேவிட் கிறிபிற் மேலும் தெரிவித்துள்ளதாவது:

போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்த நிலையிலும் அங்கு மனித உரிமைகளின் மேம்பாடு தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது அங்குள்ள நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சிறீலங்கா அரசு 30/1 என்ற தீர்மானத்தில் இருந்து விலகியுள்ளது. அதாவது அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அது தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

தனது பரிந்துரைகளை நிறைவேற்றும் பொறிமுறை ஒன்றை மனித உரிமைகள் அணைக்குழு மேற்கொள்ள வேண்டும். சாட்சியங்களை சேகரித்து சிறீலங்காவின் தற்போதைய நிலையை உன்னிப்பாக அவதானித்து செயற்படும் குழுவை அமைக்க வேண்டும்.

பிரித்தானியா அரசு தனது கூட்டணி நாடுகளுடன் இணைந்து காத்திரமான தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா படை அதிகாரிகள் மீது பயணத்தடை – மிசெல் பசெலெட்

download மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த அனைத்துலக பிரதிநிதிகளின் கருத்துக்கள் - பிரபா

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரிகள் மீது பயணத்தடைகளை கொண்டுவருவது தொடர்பில் நாடுகள் சிந்திக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசெல் பசெலெட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக த ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடுகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீதான பயணத்தடை மற்றும் அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

28 இற்கு மேற்பட்ட படை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை சிறீலங்கா அரச தலைவர் பொதுமக்களுக்கான சேவை பணிகளில் நியமித்துள்ளார். ஆனால் அவர்களில் பலர் போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இனங்காணப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காத்திரமற்ற தீர்மானத்தை ஜேர்மனி ஆதரிக்காது – ஹொல்ஜர் சிபேர்ட்

See the source image

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமற்ற தீர்மானம் ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவருவது தேவையற்றது. அதனை ஜேர்மனி ஆதரிக்காது என சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்ஜர் சிபேர்ட் தனது ருவிட்டர் தளத்தில் கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

காத்திரமான, ஆக்கபூர்வமான மற்றும் கடுமையான தீர்மானத்தை முன்வைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. அது மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்த சிறீலங்காவின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் – பிரித்தானியா கவலை

See the source image

சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியா தனது கவலையை வெளியிட்டுள்ளது.

சிறீலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் இந்த தகவலை தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இறந்தவர்களை பலவந்தமாக எரிக்கும் செயற்பாடுகள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் சிறீலங்காவில் மேற்கொள்ளப்படுகின்றன.

எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்கப்படும் ஐ.நா அறிக்கையிலும் இது தொடர்பான விடையங்ககள் கருத்தில் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடுமையான தீர்மானத்தை ஜேர்மன் உறுதிப்படுத்த வேண்டும் – கண்காணிப்பகம்

Capture 3 1 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த அனைத்துலக பிரதிநிதிகளின் கருத்துக்கள் - பிரபா

சிறீலங்கா தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானம் கடுமையானதாகவும், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை செயற்பாடுகளுக்கான அச்சுறுத்தல்களை போக்குவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் இருக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜேர்மன் நாட்டு பணிப்பாளர் வென்சில் மிசல்ஸ்கி தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜேர்மன் பணியாற்றுவதுடன், அதற்கான தலைமைத்துவத்தையும் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா மீண்டும் ஏமாற்ற முற்படுகின்றது – ஜான் குவே

Untitled 1 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த அனைத்துலக பிரதிநிதிகளின் கருத்துக்கள் - பிரபா

சிறீலங்கா அரச தலைவர் தற்போது அமைத்துள்ள விசாரணைக் குழுவானது நீதியை நிலைநாட்டுவதற்கு அல்ல; அது நாடுகளையும், மனித உரிமைகள் ஆணைக்குழுவையும் ஏமாற்றும் செயற்பாடு என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஊடகப்பிரிவு பிரதித் தலைவர் ஜான் குவே தெரிவித்துள்ளார்.

எனவே சிறீலங்கா தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானம் அங்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை செயற்பாடுகளுக்கான அச்சுறுத்தல்களை போக்குவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதை நான் எல்லா நாட்டு இராஜதந்திரிகளுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்துலகத்தின் கவனத்தை திசைதிருப்புகிறார் கோத்தா – மீனாட்சி கங்குலி

 

Meenakshi Ganguly print2 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த அனைத்துலக பிரதிநிதிகளின் கருத்துக்கள் - பிரபா

சிறீலங்கா மீதான ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் பிடி இறுகி வருகையில், அனைத்துலகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்காக மற்றுமொரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளார் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியா பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக பெருமளவான ஆணைக்குழுக்கள் சிறீலங்காவில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை எவையும் விசாரணைகளையோ அல்லது காணாமல் போனவர்களை கண்டறிவதையோ மேற்கொள்ளவில்லை.

அவர்களின் அறிக்கைகள் கூட வெளியிடப்படவில்லை. பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை.

எனவே தற்போது எச்சரிக்கை எழுந்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு புதிய தீர்மனத்தை கொண்டுவருவதுடன் அதன் நடைமுறைகளை அவதானிப்பது, ஆய்வு செய்வது, தகவல்களை திரட்டுவது சாட்சியங்களை பாதுகாப்பது போன்ற பணிகளை முன்னெடுக்க வேண்டும். சிறீலங்காவின் பொய்யான வாக்குறுதிகளை நம்புவதை உறுப்பு நாடுகள் தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக் கூறலுக்கு முழுமையான ஆதரவு – கனடா

See the source image

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

ஜெனீவா கூட்டத்தொடர் குறித்த தனது ருவிட்டர் பதிவிலேயே கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை கனடா வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தான் சிறீலங்காவின் எதிர்காலம் தங்கியுள்ளது – அமெரிக்கா

Ned Price insert public domain மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த அனைத்துலக பிரதிநிதிகளின் கருத்துக்கள் - பிரபா

சிறீலங்கா தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை அவதானமாக ஆராய்ந்து வருகின்றோம். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேசியவாதம், இராணுவமயமாக்கல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளின் முடக்கம் போன்றவை கவலை தரும் விடயங்கள் என அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்கள பேச்சாளர் நெட் பிரிஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மதித்தல் மற்றும் அதனை நிலைநாட்டுவதற்கு காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் என்பவற்றில் தான் சிறீலங்காவின் எதிர்காலம் தங்கியுள்ளது. முன்னைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயங்குவது அது மீண்டும் நிகழ்வதற்கு வழி ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.