பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் நீடிப்பது அவசியம்- அமைச்சர் சரத்வீரசேகர

40
55 Views

இலங்கையில்   பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் நீடிப்பது அவசியம் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தீவிரவாத பயங்கரவாத சக்திகள் காணப்படுகின்ற வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் கைதுகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அமைச்சர் சரத்வீரசேகர, பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் தடுப்பில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here