இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

39
50 Views

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வீதமானது 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அளுத்கே கூறியுள்ளார்

மேலும் மருத்துவர் ஹரித அளுத்கே கூறுகையில்,

“இந்த நேர்மறை வீதமானது ஒரு மாதத்துக்கு முன்பாக 3.0 மட்டத்தில் இருந்ததுடன், பின்னல், 4ஆம் மட்டத்துக்கு அதிகரித்து, இப்போது 5ஆம் மட்டத்தைக் கடந்து 5.5 அளவில் உள்ளது என்றும் இது அதிக அபாயமான நிலையாகும்.

எவ்வாறாயினும் வைரஸ் தொற்று இன்னும் சமூகத்திலிருந்து வெளியாகவில்லை. குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.

எனினும் அண்மைய தொற்றுக்கள் மேற்படி இரு கொத்தணிளுடனும் தொடர்பற்றவை. துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறிவிட்டது. எனவே இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here